காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!

 மோடி அரசை விளம்பரப்படுத்தவே நாடு முழுவதும் 

765 மாவட்டங்களில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

புதுடில்லி, அக். 24- அடுத் தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் மோடி அரசின் சாதனைகளை விளக் கும் வகையில், மாவட்டந் தோறும் அதிகாரிகளை நிய மிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தர விட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரசின் உத்தரவு நகலை இணைத்து டிவிட்டரில் கார்கே   பதிவிடுகையில், ‘மோடி அரசின் 9 ஆண்டு சாதனையை விளக்கு வதற்கு நாடு முழுவதும் 765 மாவட்டங்களில் சிறப்பு அதி காரிகளை நியமிக்க நிதி அமைச் சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், இணை செயலாளர், இயக்குநர், துணை செயலாளர் தகுதியிலான அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது சிவில் சர்வீஸ் விதிகள் 1964-இன் பிரிவை மீறுவதாகும். குறிப்பிட்ட அந்த விதியின்படி அரசியல் விடயங்களில் அதி காரிகள் தலையிடக்கூடாது. அரசின் திட்டங்களை கொண் டாடுவது மற்றும் அதனை காட்சிப்படுத்துவது கட்சித் தொண்டர்களின் பணியாகும். இந்த பணிக்கு அதிகாரிகளை அனுப்பினால் அடுத்த 6 மாதங்களுக்கு அரசு இயந்திரம் முடங்கி விடும். ஜனநாயகத்தை யும்,அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க இந்த உத்தரவுகளை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்’ என குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment