மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் தலைமையில் சென்னை யில் 13.10.2023 அன்று துவங் கியது.
கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராம கிருஷ்ணன் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண் முகம், மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலா ளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு:
இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அமைந்திருந்த அய்க்கிய முற்போக்கு கூட் டணி அரசாங்கம் சச்சார் குழு சிறுபான்மை மக்களின் பின் தங்கிய நிலையை போக்குவதற் காக பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. அதில் மிக மிக முக்கியமானது கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவி களுக்கு கல்விக் கட்டணங்கள் மற்றும் விடுதி செலவுகளுக்கான உதவித் தொகைகள் அளிக்கப் படுவதாகும்.
ஆனால், பாஜக அரசாங்கம் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மவு லானா அபுல் கலாம் ஆசாத் ஃபெலோஷிப் கடந்தாண்டி லிருந்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டுவிட்டது. அதே போல, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர் ஷிப், பிரி மெட்ரிக் ஸ்காலர் ஷிப்பில் 1 முதல் 8 ஆம் வகுப் பிற்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது.
வெளிநாட்டில் பயிலும் சிறு பான்மை மாணவர்களின் கல்விக் கடன் வட்டிக்கு மானி யம் அளிக்கப்பட்டு வந்தது. அதையும் பாஜக தலைமையிலான அர சாங்கம் கடந் தாண்டு நிறுத்தி விட்டது. சிறு பான்மை மாணவி யருக்கான பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உதவி தொகை திட்டம். இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை யும் கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
இது வன்மத்தோடு சிறு பான்மை மாணவர் களின் கல்வியை குறிவைத்து பாஜக அரசினால் நடத்தப்படும் தாக்குதலாகும். இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என்று எதுவும் ஒடுக்கப்பட்ட மாண வர்களுக்கு இருக்கக் கூடாது என்பதை நோக்க மாகக் கொண்டே பாஜக அர சாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் இந்த கல்வி உதவித் தொகைகள் கல்வி நிலை யங்கள் மூலம் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் கல்வி உத வித்தொகை கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் பொறுப்பு கல்வி நிலையங்களுக்கும் இருந்தது.
சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை முற்றிலுமாக இல்லா மல் செய்வதற்கு முன்பு பாஜக அரசாங்கம் எப்படி நேரடி பணப் பரிமாற்றம் என்று சொல்லி ஏமாற்ற ஆரம் பித்ததோ, அதேபோன்று சிறு பான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையிலும் அத்தகைய நயவஞ்சகத்துட னேயே நடந்து கொள்கிறது. இது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின - பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உத வித் தொகையை இல்லாமல் செய்வதற்கான முன்னோட்ட மாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த நயவஞ்சக நடவடிக் கையை வன்மையாகக் கண்டிக் கிறது.
ஜனநாயக இயக்கங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரலெ ழுப்ப வேண்டுமென் றும், ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்தி வைக் கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண் டும் அமல்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியு றுத்துகிறது.
No comments:
Post a Comment