நாகை, அக்.2- நாகை நகர கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் எம்.கே. குஞ்சிபாபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா 27.9.2023 புதன்கிழமை காலை 11 மணி யளவில் நாகப்பட்டினம் டாட்டா நகர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழ கத்தின் நாகை மாவட்ட செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன் தலைமை ஏற்க, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் படத்தினை திறந்து வைத்து நினை வேந்தல் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் தலைமை கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, நாகை நகர தலைவர் தெ. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
இந்நிகழ்வில் நாகை நகர் மன்றத் தலைவர் நாகை நகர தி.மு.க செயலாளர் இரா.மாரி முத்து, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, பகுத்தறிவாளர் கழக மண்டல ஆசிரியரணி செயலாளர்
இரா.முத்துகிருஸ்ணன், நாகை நகர செய லாளர் நைனா முகமது, மாவட்டதுணை செயலாளர் ரே.துரைசாமி, நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எஸ்.கே.ஜி. சேகர், நகர்மன்ற உறுப்பினர் ப.ஞானமணி, மு.க.சோமு, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமார், திராவிடர் கழக நாகை நகர துணை செயலாளர் ரவி, மாவட்ட அயலக அணி, துணை அமைப்பாளர் ஆர்.கே.பிரதீப், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சுந்தரவேல், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கல்யாண சுந்தரம், பொறியாளரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், கேப்ஸ் ரவி, மற்றும் உறவினர்களும் நண்பர்களும் திர ளாக பங்கு கொண்டனர் நிகழ்வின் நிறை வாக எம்.கே.சின்னதுரை நன்றி கூறினார்.
புதிய பொறுப்பாளர்கள்: மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை ஒன்றிய தலைவராக சோம.வீரமணியையும், ஒன்றிய செயலாளராக எம்.கே.சின்னதுரை யையும் பொறுப்பாளர்களாக நியமனம் செய் தார்கள்.
No comments:
Post a Comment