முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, புகழ்பெற்ற ‘தி எகனாமிஸ்ட்’ ஆங்கில இதழ் பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, புகழ்பெற்ற ‘தி எகனாமிஸ்ட்’ ஆங்கில இதழ் பாராட்டு!

‘கவர்ச்சி அரசியல் செய்வதைவிட பட்டறிவின் அடிப்படையில் சிக்கல்களை அணுகுகிறார்!’எனப் புகழாரம்!

உலகின் தலைசிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் “தி எகனாமிஸ்ட்” 177 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அரசியல், வணிகம், தொழில் நுட்பம் என பல்வேறு தளங்களில் கட்டுரைகள் வெளியிடும் “தி எகனாமிஸ்ட்” இதழுக்கு உலகம் முழுக்க 16 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருக் கின்றார்கள்.

இப்படி பல பெருமைகளைக் கொண்ட “தி எகனாமிஸ்ட்” இதழில், ஒரு முழுப் பக்க அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்தும்  அவரது அரசின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்தும் கட்டுரை வெளியாகியுள்ளது.

“Meet the Dravidan Stalin” என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை, “இந்தியா வின் தலைவரான பிரதமர் மோடி அளிக்காத செயல்திறனை வழங்கும் தமிழ்நாட்டின் தலைவர்” என மு.க.ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து உள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் இறந்த அதே வாரத்தில் பிறந்த தனதுமகனுக்கு அவரது நினைவாக ஸ்டாலின் என கலைஞர் பெயர் சூட்டியது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கவர்ச்சி அரசியல் செய்வதை விட, பட்டறிவின் அடிப்படையில் பொருத்தமான முறையில் சிக்கல்களை அணுகுவதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ மற்றும் பிரதமர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுடன் மாற்றுக் கருத்துக்கொண்ட ரகுராம் ராஜன் உள்ளிட்ட அய்ந்து பொருளாதார அறிஞர்கள் கொண்ட பொருளாதார ஆலோ சனைக் குழு; மாநிலத்தின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள 

“தி எகனாமிஸ்ட்”, இந்த நிய மனங்கள் பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டும் வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க.அரசு மற்றும் பிரதமர் மோடியின் அதிகாரப் பரவலாக்கும் முயற்சிகளுக்கு எதி ரான எதிர்க்கட்சிகளின் முகமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளதாகவும், எதிர்வரும் 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்துக் களம் இறங்கப் போவது யார் என்ற கவனம் மு.க.ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் ஆகியோர் மீது விழுந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளில் சென்னையின் மேயராகப் பதவியேற்றதிலிருந்தே மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை மு.க.ஸ்டாலின் பிடிக்கத்தொடங்கிவிட்டதாக அதில் கூறப்பட் டுள்ளது.

கரோனா தொடர்பாக அமைக்கப்பட்ட சட்டமன்றக் கட்சி பிரதிநிதிகளின் குழுவில் முந்தைய அ.தி.மு.க. அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை இணைப்பதன் மூலம்  ஒரு சிறந்த நடை முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளதாகவும் “தி எகனாமிஸ்ட்” புகழாரம் சூட்டியுள்ளது.

 நன்றி: 'முரசொலி', 2.10.2023


No comments:

Post a Comment