சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, வடநாட்டைச் சேர்ந்த ஆலன் இன்ஸ்டியூட் என்ற தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று "இட ஒதுக்கீடு முடிவடைகிறது" என்று பெரிய தலைப்பிட்டு விளம்பரம் செய்து வருகிறது.
"பயிற்சியில் சேர்வதற்கான இடங்கள் நிறைவு பெறுகின்றன" என்பதைச் சொல்லுவதற்கு எத்தனையோ சொற்றொடர்கள் இருந்தும் "இட ஒதுக்கீடு முடிவடைகிறது" என்று விளம்பரம் செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரான விஷமத்தனம் என்று சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளது. "ராஜஸ்தானின் கோட்டா என்னும் பகுதியில் இத்தகைய பயிற்சி மய்யங்கள் கல்வியைப் பந்தயமாக்கி பெரும் கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டு வரும் நிலையில் இந்த விளம்பரத்தின் பின்னணியில் இருப்பது மொழிபெயர்ப்புக் குழப்பமோ, அறியாமையோ அல்ல - ஆரியத்தனமே!" என்று அந்த விளம்பரத்தின் பின்னூட்டத்தில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இடஒதுக்கீடு, சமூகநீதி என்றாலே ஆதிக்க சக்திகளுக்கு எட்டிக்காயாகக் கசக்கத்தான் செய்யும்!
இடஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது என்றதும் இப்படியெல்லாம் விளம்பரம் செய்து 'அற்ப சந்தோசம்' அடைகிறார்களோ!
No comments:
Post a Comment