பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் : பா.ஜ.க. ஆளும் உ.பி.யின் அவலம்
பதோஹி,அக்.16- உத்தர பிரதேசத் தின் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங் களுடைய 18 வயது மகளை மோதிலால் (வயது 52) என்பவ ரிடம் அழைத்து சென்றுள் ளனர். அவர் தன்னை மந்திர, தந்திரங்கள் அறிந்த நபர் என கூறிக் கொண்டு, உங்களுடைய மகளுக்கு பேய் பிடித்து விட்டது என கூறி இருக்கிறார்.
இதனால் அவர்கள் பயந்து போயுள்ளனர். அந்த இளம்பெண் ணின் உடலில் பிடித்த பேயை நான் ஓட்டி விடுவேன் என கூறி, அதற்கான பூஜை செய்வதற்கு ரூ.4 ஆயிரம் வேண்டும் என கூறி யுள்ளார். கடந்த 12.10.2023 அன்று மாலை இளம்பெண்ணின் தந்தை, அவருடைய மகளை அழைத்துக் கொண்டு மோதி லாலிடம் சென்று விட்டார்.
அந்த நபர், இரு சக்கர வாகனத்தில் இளம்பெண்ணை அழைத்து கொண்டு, பதோஹி நகரில் தர்வாசி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலின் பின்னால் உள்ள அறைக்கு சென்றி ருக்கிறார். இதன்பின்பு இளம் பெண்ணை மோதி லால் பாலியல் பலாத்காரம் செய் துள்ளார்.
3 மணிநேரத்திற்கு பின்பு வெளியே வந்த அவர், அடுத்த நாள் சிகிச்சைக்காக மீண்டும் வர வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளதுடன், இந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார்.
இதுபற்றி பெற்றோரிடம் அந்த இளம்பெண் கூறியுள்ளார். இத னால், அதிர்ச்சி அடைந்த அவரு டைய தந்தை காவல்துறையில் புகார் அளித்து உள் ளார். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.
இதுபற்றி காவல்துறை கண் காணிப்பாளர் மீனாட்சி கத்யாயன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற் கொண் டனர். இதில், மருத்துவ பரிசோ தனையில் இளம்பெண் பலாத் காரம் செய்யப்பட்டது உறு தியா னது. நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வ வாக்கு மூலம் அளித்ததன் அடிப்படையில், மோதிலாலை காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment