சென்னை, அக்.15- வேளாண் துறை வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவ சாயப் பணிகளின் பயன்பாட் டிற்கு தேவைப்படும் இயந்திரங் கள், டிராக்டர் வாகனங்களை தயாரித்து வழங்கி வம் சோனா லிகா டிராக்டர்ஸ் நிறுவனம் செப்டம்பர் 2023இல் 15.8 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டி யுள்ளது.
இந்தியாவில் பல கடுமை யான வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவியாக, ஹெவிடூட்டி டிராக்டர்களுக்கு 5 ஆண்டு உத்திரவாதம் வழங்கு வதோடு, விவசாயிகள் நலன் சார்ந்த சுலப கடனுதவி திட் டங்களையும் அறிமுகம் செய் துள்ளது.
மேலும் இவ்வாகனங்களின் விலையை ஆன்லைனிலும் வெளியிட்டுள்ளது. வேளாண் துறையில் இயந்திர மயமாக்கல் தேவை அதிகரித்துள்ளதால் டிராக்டர் உற்பத்தியை அதிகரித் துள்ளோம் என இந்நிறு வனத்தின் புதிய சாதனை குறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவன இணை மேலாண் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment