விண்வெளித் துறையில் முத்திரை பதித்த தமிழர்கள்
ஒன்பது விஞ்ஞானிகளில் ஆறு பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் - இருவர் பெண்கள்
சென்னை, அக். 3 - விண்வெளி துறையில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ அறிவியலாளர்கள் 9 பேரையும் கவுரவித்து, அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். முதுநிலை பொறியியல் படிக்கும் 9 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலாளர்களின் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க ரூ.10 கோடி தொகுப்பு நிதியம் உரு வாக்கப்படும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத் தில் உள்ளஅண்ணா நூற் றாண்டு நூலகத்தில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில், சாதனை படைத்த தமிழ்நாட் டைச் சேர்ந்த விண்வெளி அறிவியலாளர்களுக்கு நேற்று (2.10.2023) பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) மேனாள் தலைவர் கே.சிவன், திட்ட இயக்குநர்கள் மயில் சாமி அண்ணாதுரை (சந்திர யான்-1), மு.வனிதா (சந்திர யான்-2), ப.வீரமுத்துவேல் (சந்திரயான்-3), நிகார் ஷாஜி (ஆதித்யா-எல்1), திருவனந்த புரம் திரவ உந்து அமைப்பு மய்யத்தின் இயக்குநர் வி.நாரா யணன், சிறீஹரிகோட்டா சதீஷ் தவான்ஆய்வு மய்யத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற் கைக் கோள் மய்யத்தின் இயக் குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ் ஆகி யோரை பாராட்டிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில் முதலமைச்சர் பேசியதாவது:
நிலவை தொட்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை இந் தியா பெற்றுள்ளது. மற்ற நாடு களுக்கு இல்லாத சிறப்பாக, இதுவரை அறியப்படாத நில வின் தென்துருவத்தை சந்திர யான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியுள்ளது. அதன் திட்ட இயக்குநராக வீரமுத்து வேல் பணியாற்றியது நமக்கு பெருமை.
விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழ்நாட் டில் இருந்தது. அதுதான் பல அறிவியல் மேதைகளை உரு வாக்கியுள்ளது. இங்கு கவுரவிக் கப்பட்டுள்ள 9 அறிவியலா ளர்களில் 6 பேர் அரசுப் பள்ளி களில் படித்தவர்கள். குறிப்பாக 2 பேர்பெண்கள் என்பது பெரு மைக்குரியது.
சந்திரயான்-1 திட்ட இயக்கு நராக மயில்சாமி அண்ணா துரை இருந்தார். கடந்த 2008 அக்.28ஆ-ம் தேதி அது நிலவை சுற்றியதும், நிலவில் நீர்க் கூறுகள் இருப்பதை கண்ட றிந்து சொன்னது. சந்திரயான்-2 கடந்த 2019 ஜூலை 15ஆ-ம் தேதி ஏவப்பட்டது.
இதன் திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். இஸ்ரோ தலைவராக சிவன் இருந்தார். தற்போது ஏவப்பட்டுள்ள சந் திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இவர்களால் தமிழ்நாட்டிற்கே பெருமை.
இதை போற்றும் விதமாக, இந்தியாவுக்கும், தமிழ்நாட் டிற்கும் பெருமை தேடித் தந்த, இனியும் தேடித் தரப்போகிற அறிவியல் மேதைகளான 9 பேருக்கும், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
உங்கள் அறிவாற்றலுக்கு அளவுகோல் இல்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத் தின் அடையாளமாக தமிழ் நாடு அரசு இதைவழங்குகிறது. இதை ஏற்றுக்கொண்டு, நாட் டுக்கு மேலும் மேலும் நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத ஒதுக் கீட்டில், அரசின் கல்வி உதவித் தொகை பெற்று இளநிலை பொறியியல் முடித்து, முது நிலை பொறியியல் படிப்பை தொடரும் 9 மாணவர்களுக்கு சாதனை அறிவியலாளர்களின் பெயரில் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்க உள் ளோம்.
இதன்மூலம் கல்விக் கட்ட ணம், விடுதிக் கட்டணம் உள் ளிட்ட அனைத்து கட்டணங் களும் அவர்களுக்கு வழங்கப் படும்.
அறிவியலாளர்கள் தலை மையில் அமைக்கப்படும் குழுக் களால், தகுதிவாய்ந்த மாணவர் கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக ரூ.10 கோடியில் தொகுப்பு நிதியம் உருவாக்கப் படும்.
தற்போது நடந்து வரும் இந்த நிகழ்வை 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க அரசு ஏற்பாடு செய் துள்ளது. இதை பார்க்கும் மாணவர்கள் தங்கள் அறிவியல் ஆர்வத்தையும், ஆளு மைத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேடையில் உள்ள ஆளு மைகளை போன்ற அறிவியல் மேதைகள் இன்னும் பலர் உருவாகவேண்டும். அதுதான் இந்த அரசின் நோக்கம். இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் அனைத்து அறிவிய லாளர்களுக்கும் பாராட்டுகள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில், சாய்ராம் கல்வி குழுமம் சார்பில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தங்கள் கல்லூ ரியில் படித்த சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்து வேலுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியலாளர்கள் சார் பில் முதலமைச்சருக்கு நினை வுப் பரிசை நாராயணன் வழங் கினார். துரைமுருகன் உள் ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உயர் கல்வித் துறை செயலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment