தமிழ்நாடு அரசின் உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

தமிழ்நாடு அரசின் உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,அக்.24 - பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2023 அன்று தொடங்கிய காலாண் டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களிடம் இருந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் 10ஆம் வகுப் பில் தோல்வி அல்லது தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதி களை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 30.9.2018 அன்றைய 

நிலையில் 5 ஆண்டுக ளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக் கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப் படுகிறது. 

மாற்றுத்திறனாளி களை பொறுத்தவரை யில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித் திருந்தால் போதுமானது.

மாற்றுத் திறனாளி களுக்கு பள்ளியிறுதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.750 வீதமும் மற் றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.1,000 வீதமும் வழங்கப்படும்.

இதர மனுதாரர்களை பொறுத்த வரையில் பள்ளியிறுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.300 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.400 வீதமும் மற்றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.600 வீதமும் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளி களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மற்றவர் களுக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண் டும்.

இந்த உதவித் தொகையினை பெறுவதற்கு  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர் கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள் ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வய திற்குள்ளும் இருக்க வேண்டும்.

உதவித் தொகை விண் ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையை ஆதார மாக காண்பித்து பெரம்ப லூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள லாம். 

ஏற்கெனவே, விண் ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற் றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 30ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட் களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் இயங்கும் வேலை வாய்ப் பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மய மாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப் பிக்கலாம்.

மேலும் உதவித் தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதி முறைகளுக்கு உட்பட்டு ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்க அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று பெரம் பலூர் மாவட்ட ஆட் சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment