மலேசியா, அக். 2- மலேசிய திராவிடர் கழகம் கெடா மாநில ஏற்பாட்டில், 22.9.2023, பிற்பகல் 3.00 மணியள வில், சுங்கைபட்டாணி, தாமான் கிளாடி, பொது மண்டபத்தில், மெர்டேக்கா தினம், தந்தை பெரியார் 145 - ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டும், பள்ளி மாணவர்களுக்கான, வண்ணம் தீட்டும் போட்டி, மற்றும் பேச்சுப் போட்டியும், கெடா மாநிலத் தலைவர் லலிதா குமாரி தலைமையில், (2023) தேர்வு பெற்ற புதிய செயலவை உறுப்பினர்களின் ஒத்து ழைப்போடு சிறப்பாக நடத்தினார்கள்.
விழாவை, சிடாம். கீரி சட்டமன்ற உறுப்பினர்
பாவ் வோங், அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
கழகத் தேசியத் தலைவர் டத்தோ.ச.த.அண்ணா மலை சிறப்புரையாற்றி, வெற்றிப் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மற்றும், சுங்கைபட்டாணி நாடாளுமன்ற பிரதிநிதி சந்திரசேகரன், ம.தி.க. தேசிய உதவித் தலைவர் மனோகர், மாநிலத் துணைத்தலைவர் செயராமன், பீடோங் குமார், கம்போங் ராஜா கிளைத்தலைவர் வ.கதிரவன் , தாமான் கிளாடி தலைவர் செல்லையா, மாநில செயலவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்களென 150 பேருக்கு மேல் கலந்து சிறப்பித்தார்கள்.
சிறப்பு அங்கம், இரண்டு மாணவர்கள், பாரதியார் பற்றியும், இரண்டு மாணவர்கள் தேசிய மொழியில் மலேசிய சுதந்திர நாள்விழா குறித்தும், ஒரு மாணவர், தந்தை பெரியார் வரலாற்று குறிப்பையும் திறம்பட பேசினார் கள். குறிப்பாக, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில தோழர்களுக்கு, தலைமைக் கழக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment