15.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்: 9 ஆண்டு கால மோடி அரசு பெண்கள் நலனை சீரழித்தது; திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு
தி டெலிகிராப்:
👉 மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங் களில் 145 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சரண் சிங் சப்ரா பேச்சு.
👉 அக்டோபர் 24க்குள் மராட்டியர்களுக்கு ஒதுக் கீட்டை அறிவிக்காவிடில், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மனோஜ் ஜாரங்கே மிரட்டல்.
👉 ஜாதிவாரி - கணக்கெடுப்பை மோடி அரசு நடத்த வேண்டும். இல்லையெனில் மேற்கு வங்க அரசு
மாநிலத்தில் சர்வே எடுக்க வேண்டும் என வங்காளத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பு களின் பிரதிநிதிகள் கோரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 எம்.பி.பி.எஸ். சேர்க்கை: 80க்கும் மேற்பட்ட காலி இடங்களை மாநில ஒதுக்கீட்டில் ஒப்படைக்குமாறு மோடி அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment