அறந்தாங்கி கழக மாவட்டத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா- சமூகநீதி நாள் உறுதியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

அறந்தாங்கி கழக மாவட்டத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா- சமூகநீதி நாள் உறுதியேற்பு

அறந்தாங்கி, அக். 16- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் உலகத் தலைவராம் தந்தை பெரியாரின் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கிராமங்கள் தொடங்கி நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது. அறந்தாங்கி ஒன்றியம் நெய்வத்தளி கிராமத்தில் மாவட்ட ப.க. செயலாளர் க.வீரையா செம்மொழித் தோட்டத்தில், கழக கொடி பெரியார் பிஞ்சு செம்மொழி வீரையா ஏற்றி வைத்தார். 

நெய்வத்தளி வீரையா  இல்லத்தில் தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப் பட்டது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர் மாலதி வீரையா சிறப்பாக சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் பிஞ்சு செம்மகிழன் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நெய்வத்தளி ஊராட்சியில் பொதுக் குழு உறுப்பினர் சவுந்தரராசன் தலைமையில் மணிராசு கழக கொடி ஏற்றினார். ஒலி முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் மேகவர்ணம், நாகராஜன், திமுக இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு செம்மகிழன் அனை வருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

திருவரங்குளம்

திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில், தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

கழக கொடியினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் பேரன்பு நண்பர் செரியலூர் பன்னீர்செல்வம் ஏற்றி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், ப.க.மாவட்ட செயலாளர் வீரையா சேந்தன்குடி துரை உள்ளிட்ட கழகத் தோழர்கள், வருகை தந்து சிறப்பித்தார்கள். பேருந்து நிலையத்தில் இருந்த பொது மக்களுக்கு பெரியார் பிஞ்சு செம்மகிழன் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார்.

சமத்துவபுரத்தில்

அறந்தாங்கி கழக மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கழக பேச்சாளர், மாங்காடு சுப.மணியரசன் தலை மையில், அனைத்து கட்சி தோழர்களும் ஊர்வலமாக சென்று தந்தை பெரியாரின் சிலைக்கு ஒலி முழக்கங்களுடன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

அறந்தாங்கி கழக மாவட்டம் புதுக்கோட்டைவிடுதியில் உள்ள தந்தை பெரியார் முழு உருவ சிலைக்கு மாவட்டக் காப்பாளர் பெ. இராவணன் தலைமையில் தோழமை இயக் கங்களின் தோழர்களும் திரளாக வந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டு முழக்கத்துடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கறம்பக்குடி

அறந்தாங்கி கழக மாவட்டம் கறம்பக்குடி சின்னான்கோன் விடுதி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு, மாவட்ட செயலாளர் க.முத்து தலைமையில், திமுக ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் அம்பிகாபதி மற்றும் தோழமை கட்சிகளின் முன்னணி தோழர்கள் இணைந்து மாலை அணிவித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டு முழக்கத்துடன் சிறப்பு செய்தார்கள்.

கறம்பக்குடி கடைவீதியில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை அலங்காரம் செய்து வணிக பெருமக்களும், பொது மக்களும் அனைத்து கட்சியின் தோழர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாவட்டத் தலைவர், க மாரிமுத்து இல்லத்தில், காலை 9.00 மணிக்கு கழக கொடியினை, இளைஞர் அணி தோழர் தமிழ்வீரன் ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார் மகளிர் அணி தோழர் மா.மலர், அறந் தாங்கி நகர தலைவர் ஆ வேல்சாமி இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றினார் மகளிர் அணித் தோழர் அமுதா வேல் சாமி அவர்கள். அறந்தாங்கி சட்ட எரிப்பு போராட்ட வீரர் சுயமரியாதைச் சுடரொளி தியாகி, மெய்யநாதன் குடும்பத்தினர் சார்பில், இல்லத்தின் அருகில் தெய்வானை புரட்சி மணி கழக கொடியை ஏற்றி வைத்து பெரியார் பிறந்த நாள் கொண்டாடப் பெற்றது. இல்லத்தில் உள்ளோர் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர். அறந்தாங்கியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாவட்டத் தலைவர் 

க.மாரிமுத்து தலைமையில் பொதுக் குழு உறுப்பினர் 

த.சவுந்தரராஜன், நகரத் தலைவர் ஆ.வேல்சாமி, நகரச் செயலாளர் பகுத்தறிவு பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க. வீரையா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை செயலாளர் ப.மகாராசா சமூகநீதி நாள் உறுதி மொழி வாசித்தல் மற்றும் சுயமரியாதை முழக்கம் செய்தார். 

நிகழ்ச்சியில் கழக தோழர் வழக்கறிஞர் குமார் பெரியசாமி, பெரியார் பிஞ்சுகள் பண்பாளன், செம்மகிழன், தோழர்கள் பெ. இராமையன், தேவேந்திரன், உண்மை பாலு, திமுக நகர்மன்ற உறுப்பினர் சக்திவேல், மூத்த போராளி வின்சென்ட் ராசேந்திரன், தொமுச செயலாளர் நா. யோகராஜா, உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விசிக, மற்றும் தோழமை அரசியல் கட்சிகளின் தோழர்கள் பலர் கலந்து கொண்டு அய்யா சிலைக்கு மாலை அணி வித்தனர்.

ஆலங்குடி

ஆலங்குடியில் கடைவீதி, பேருந்து நிலையம், வடகாடு முக்கம் ஆகிய இடங்களில் கழக கொடியை ஏற்றி ஆலங்குடி நகர தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பிக்கப் பட்டது. 

நிகழ்ச்சியில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குப்பக்குடி இரா இளங்கோ குப்பக்குடி முருகேசன் கருணா கரன் மற்றும் கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

துரையரசபுரம்

அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம் சமத்துவபுரத்தில் பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் க மாரிமுத்து தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர ராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குமார், கழகத் தோழர் ஆவுடையார் கோயில் கேமரூன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணை தலைவர் கண் மருத்துவர் வீ.சொக்கலிங்கம் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார். ஏராளமான பொதுமக்களும் மாணவர்களும் திரண்டு வந்து வரவேற்பு அளித்து, சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்று மகிழ்ந்தார்கள்.

அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் தலைவர் கலைஞர் திறந்த தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தோழர்கள் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட ப க செயலாளர் வீரையா மற்றும் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தொகுப்பு: க.வீரையா,  மாவட்ட செயலாளர் ப.க.


No comments:

Post a Comment