சென்னை, அக். 30- சேலம் காம லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமா னம் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் விமான சேவை கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், அய்தரா பாத், சென்னை போன்ற நகரங் களுக்கு விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்தன.
அதன்படி, கடந்த 16-ஆம் தேதி யில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. முதலில் பெங்களூரு-கொச்சிக்கு இடையே விமானம் இயக்கப்பட்டது. இந் நிலையில் இன்று சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட வுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இண்டிகோ ஏர் லைன்ஸ் நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்தது.
இதனால் சென்னை - சேலம் இடையே மூன்றரை ஆண்டுக ளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கப்பட வுள்ளது. சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என தகவல் வெளி யாகியுள்ளது.
No comments:
Post a Comment