சென்னை, அக்.24 சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கால்வாய் பகுதியில் குப்பை, கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையினால் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில், கொசு ஒழிப்பு பணியா ளர்களால் தினசரி வீடுகள் தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல், சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்ற மழைக் கால சிறப்பு மருத்துவ முகாமை, மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் 20.10.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ந்து தனது பணிகளை மேம்படுத்தி வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். அந்த வகையில்தான் பட்டினப்பாக்கம் காலி இடங் களை முழுமையாக சுத்தப் படுத்தி டெங்கு ஒழிப்பு பணி களை செய்துள்ளோம்.
தற்போது ஆறுகளில் தேங்கி கிடக்கும் குப்பை, கழிவுகளையும் சுத்தம் செய்து வருகிறோம். 2 வகையாக ஆறுகளில் குப்பை தேங்குகிறது. ஒன்று கடல் நீரோட்டத்தில் வரக்கூடிய குப்பை இங்கு வந்து தேங்குகிறது.
இன்னொன்று சுற்றுப் பகுதி களை சேர்ந்த சிலர் குப்பையை கொட்டுகின்றனர். எனவே அவர்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தி குப்பையை அகற்றி வருகிறோம். இந்த பகுதி யில் பொதுக் கழிப்பிடங்களை அதிகமாக கட்டவும் முடிவு செய்துள்ளோம். நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 700 கிராம் குப்பையை கொட்டுகிறார்.
இதை எல்லாம் தவிர்க்க வேண்டும். மழை காலத்தில் கால்வாய் பகுதிகளில் குப்பை யையோ, திடக்கழிவுகளையோ போட்டால் மழைநீர் எப்படி வெளியேறும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும்.
சென்னையில் 685 கி.மீ., தூரம் மழைநீர் வடிகால் பணி கள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில இடங்களில் கேபிள், குடிநீர் குழாய் குழாய் பதிப்பது போன்ற காரணங் களால் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் உள்ளது.
சில இடங்களில் தரைப் பகுதியில் இருந்து 2 அடிக்கு கீழே வீடுகளை கட்டியுள்ளனர். எனவே அந்த பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது.
அதுபோன்ற இடங்களில் பம்பு செட்கள் மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு இது போன்று 37 இடங்களை கண்டறிந்துள்ளோம். அங்கு, மழைநீரை விரைந்து வெளி யேற்ற முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர் லால் குமாவத், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெக தீசன் மற்றும் மண்டல அலு வலர் உட்பட பலர் உடனி ருந்தனர்.
சிசிடிவி மூலம் கண்காணிப்பு
மாட்டு உரிமையாளர்களுக்கு நாங்கள் சொல்வது, மாடுகள் முட்டுவதால் ஒரு உயிர் போவதை மாநகராட்சியோ, அரசோ வேடிக்கை பார்க்க முடியாது. பறிமுதல் வண்டி வரும்போது மட்டும் மாடுகளை வீடுகளில் கட்டி வைக்கின்றனர்.
மற்ற நேரங்களில் சாலையில் திரிய விடுகின்றனர். சிசிடிவி மூலம் கண்காணித்து சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம், என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முறையீடு
தெரு நாய்களை பொறுத் தவரை ஆண்டொன்றுக்கு 15,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறோம்.
ஆனால் கருத்தடை செய்யப் பட்ட நாய்களை அதே பகுதியில் தான் விட வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. இது சட்டத்தில் இருக்கிற ஓட்டை. எனவே, நாய்களை அப்புறப் படுத்துவது குறித்து நீதிமன் றத்துக்கு சென்று நாங்கள் விளக்க உள்ளோம், என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் பரிசோதனை
காய்ச்சலை பொறுத்தவரை முழு கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையில் டெங்கு பாதிப்பு 443 பேருக்கு பதிவாகியுள்ளது. இந்த மாதம் மட்டும் 92 பேருக்கு பதிவாகியுள்ளது.
சிக்கன் குனியாவை பொறுத் தவரை இதுவரைக்கும் இந்த மாதத்தில் 21 பேருக்கு பதிவாகி யுள்ளது. 4,449 முகாம் நடத்தி யுள்ளோம். ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம், என ஆணையர் கூறினார்.
No comments:
Post a Comment