இதுதொடர்பாக, அவர் நேற்று முன்தினம் (1.10.2023) விடுத்த அறிக்கை:
தமிழ்நாடு, புதுச்சேரி மட்டு மின்றி, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, கேரளா மற்றும் மகா ராட்டிரா ஆகிய மாநிலங்களில் பரந்துபட்ட அளவில் விசிக எழுச்சி பெற்றுள்ளது.
"இந்தியா" கூட்டணியின் ஓர் அங்கமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் டிச. 23ஆம் தேதி திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை ஒருங் கிணைக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் விசிக பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டி, கட்சியின் 'தேர்தல் அரசியல் வெள்ளி விழா வாகவும் கட்சி தலைமையின் அகவை அறுபது மணி விழா நிறைவு விழா வாகவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
மாநாட்டில் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங் கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இத்துடன், காங்கிரஸ் கட்சி யின் அகில இந்திய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் மாநாட்டில் பங்கேற் கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment