மன்னார்குடி, அக். 19- மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள், மேனாள் மேல தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலை வர் மன்னை ஆர்.பி. சாரங்கன் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள், மேனாள் மன்னை நகர திராவிடர் கழகச் செயலாளர் கே. ராஜகோபால் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழக பட் டிமன்றம் மன்னார்குடி பந்தலடி யில் 10.10.2023 அன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மன்னார்குடி கழக மாவட்ட செயலாளர் கோ. கணேசன் தலைமை வகித்தார்.
கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட் டத் துணைத் தலைவர் ந.இன்பக் கடல், மாவட்டத் துணைச் செய லாளர் வி.புட்பநாதன்,மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வை.கவுதமன், பொதுக்குழு உறுப் பினர் ப.சிவஞானம், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப் பாளர் சி.ரமேஷ், மன்னை ஒன் றிய செயலாளர் மு.தமிழ்ச்செல் வம், மன்னை ஒன்றிய செயலாளர் கா.செல்வராசு மன்னை நகரத் தலைவர் எஸ்.என். உத்திராபதி மன்னார்குடி கழகத் தோழர் இரா. கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழர்கள் தந்தை பெரியாரை நேசிக்க பெரிதும் காரணம் "மான மீட்பு போர் குணமே-அறிவூட்டும் செயல் திறனே என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடுவராக இருந்தார். "மானமீட்பு போர் குணமே" என்ற அணியில் திராவிடர் கழக மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன்,கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு ஆகியோரும். "அறிவூட்டும் செயல் திறனே" என்ற அணியில் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன், கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி ஆகியோரும் வாதிட்டனர்.
இரு அணிகளின் ஆணித்தர மான கருத்துகளை கூட்டத்தில் இருந்தோர் ஆரவாரத்துடன் கை தட்டி வரவேற்றனர். இரு அணி யினரும் தங்களுடைய வாதங் களை பல்வேறு ஆதரங்களை முன்வைத்து வாதாடி இருப்பதாக குறிப்பிட்ட நடுவர் துரை. சந்திர சேகரன், மானமீட்பு போர் குணமே என்ற காரணம்தான் சற்று கூடுதலாக இருப்பதாக கூறி தமிழர்கள் தந்தை பெரியாரை நேசிக்க பெரிதும் காரணமாக இருப்பது மானமீட்பு போர் குணமே என தீர்ப்பு கூறி கூட் டத்தினை நிறைவு செய்தார்.
கூட்டத்தில், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலைவர் மா அழகிரிசாமி, உரத்தநாடு ஒன்றிய கழக துணைத் தலைவர் இரா. துரைராஜ், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தங்க.வீரமணி ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் இரா. கோபால், ப.க.மாவட்ட செயலாளர் ந.உ.கல்யாணசுந்தரம், மாவட்ட பக ஆசிரியர் அணி அமைப்பாளர் நா. ரவிச்சந்திரன், நகர ப.க. தலைவர் கோவி. அழகிரி, ப.க.செயலாளர் பேராசிரியர் கோ.காமராசு, மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் மன்னை சித்து, கழக வழக்குரைஞர் எஸ். உதயகுமார், நீடாமங்கலம் ஒன் றிய கழக தலைவர் தங்க.பிச்சை கண்ணு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.இளங்கோவன், மன்னை நகர இளைஞரணி தலைவர் மா. மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி தலைவர் பி.இளங்கோவன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ச.அய்யப்பன், மன்னார்குடி ஒன்றிய துணைச் செயலாளர் கவிஞர் கோ.செல்வம், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், மன்னை நகர துணை தலைவர் வெ.அழகேசன், நீடாமங்கலம் ஒன்றிய அமைப் பாளர் மா. பொன்னுசாமி, நீடா மங்கலம் ஒன்றிய துணை செய லாளர் ஆர். சக்திவேல், மன்னார் குடி நகர அமைப்பாளர் மு. சந் திரபோஸ், மன்னார்குடி சிவா. வணங்காமுடி, பக தோழர்கள் ஈரோடு ப.அய்யப்பன், நெம்மேலி ஆர்.பாலகிருஷ்ணன், நீடாமங் கலம் நகர கழக தலைவர் கி. ராஜேந்திரன், மன்னார்குடி கழக தோழர்கள் இரா. வெங்கட்ராமன். வெ.செல்வம், ஜெ.சம்பத், பெரியார் பெருந்தொண்டார்கள் மேலவாசல் கோ.திரிசங்கு, மேலத் திருப்பாலக்குடி எம்.கோவிந்தராசு, பக தோழர்கள் ச. அறிவானந்தம், ச. முரளிதரன், பி.கே.சாந்தி சேகர், பகுத்தறிவு ஆசிரியர் அணி ஜெ. அருளரசன், மேலவாசல் அ.குண சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மன்னார்குடி மேலராஜ வீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று பாமணியில் உள்ள சுய மரியாதை சுடரொளி ஆர்.பி. சாரங்கன் அவர்களின் நினைவு இடத்தில் மலர் மாலைகள் வைத்து வீரவணக்கம் செலுத்தி னர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் மந்திரமா தந்திரமா என்னும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கழக அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன் வரவேற் றார். மன்னார்குடி நகர கழக செயலாளர் மு.இராமதாசு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment