ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 21, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.10.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சட்டமன்ற இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று பஞ்சாப் முதலமைச்சர் தகவல்.

* சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டத்தை மறுப்பது ஆளுநரின் தரக்குறைவான நடவடிக்கை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் பாஜக மதம் மற்றும் ஜாதியைப் பற்றி பேசுகிறது, பிரியங்கா கண்டனம்.

* நீதிபதிகள் பரிந்துரையில் ஒரு கொலீஜியம் தீர்மானத்திலிருந்து சில பெயர்கள் அறிவிக்கப்பட்டு சில பெயர்கள் ஒன்றிய அரசால் ஒத்திவைக்கப்படும் போது, அது சீனியா ரிட்டி பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது என சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு துலியா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கவலை தெரிவித்துள்ளது.

* அய்ரோப்பாவில் யூதர்கள் கடந்து சென்ற அனுபவத் திற்கும், இந்தியாவில் பார்ப்பனர்களின் அனுபவத்திற்கும் ஒப்பீடு என்பதே தவறு. முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் பார்ப்பனர் கள் எந்தத் துன்பமும் படவில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் சார்தக் சர்மா.

தி இந்து:

* ஒன்றிய சட்ட ஆணையம் தனது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை குடியரசு மேனாள் தலைவர் கோவிந்த் தலைமையிலான குழுவுடன் அடுத்த வாரம் பகிர்ந்து கொள்ள உள்ளது

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மருத்துவ மாணவர் சேர்க்கையில் விதிமீறல் காரணமாக மகாராட்டிரா, பீகார் மற்றும் வங்காளம் போன்ற மாநிலங்களில் 600 மாணவர்களுக்கு அனுமதி ரத்து - தேசிய மருத்துவ குழு அதிரடி நடவடிக்கை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment