சென்னை,அக்.7- சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் 66-ஆவது காமன்வெல்த் நாடா ளு மன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கு கடந்த 4-ஆம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக, சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வுகள், ஊடுருவல்கள் குறித்து கடந்த 2003-ஆம் ஆண்டு லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டதில் இருந்து, காமன்வெல்த் நாடுகளில் அதி கார பகிர்வுகளை உறுதிப்படுத் துவதிலும், நல்லாட்சியை மேம் படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், பல நாடுகளில் இக்கோட்பாடுகளை கடைப்பிடிப்பதில், பல்வேறு சவால்கள், தடைகள் நீடிக்கின்றன.
இந்த கோட்பாடுகள் மூலம் காமன்வெல்த் நாடுகளில் ஜன நாயக வளர்ச்சி, நிர்வாகம் வழி நடத்தப்படுவதை உறுதிசெய்ய, தொடர் முயற்சி தேவை. ஒவ் வொரு உறுப்பு நாட்டிலும் குறிப்பிட்ட வளர்ச்சி, முன்னேற் றம் பரவலாக வேறுபடக்கூடும். 2023-இல் இந்த கோட்பாடுகளின் நிலை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழ்நிலைகளை பொருத்தது என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் திறமையான நிர்வாகத்தை வழங்கி, தமிழ் நாட்டின்முன்னேற்றத்துக் கான வளர்ச்சி பணிகளை முதல மைச்சர் ஸ்டாலின் மேற் கொண்டு வருகிறார். அவரது ஆட்சிக்காலத்தில், சட்டப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடு களை கடைப்பிடிக் க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகி றேன். சட்டப்பேரவை, நீதிமன் றம், நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன். -இவ் வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment