மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் நடக்கவில்லை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் நடக்கவில்லை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் தகவல்

சென்னை, அக்.28-  மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் நடக்கவில்லை என்று கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.  செய்தியாளர்க ளிடம் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அருண் கூறியதாவது: 

மயிலாடுதுறைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆளுநர் வந்தபோது கூடு தல் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப் பட்டது. அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வந்தவர்கள் ஒன்றுகூடி நின்றார்கள். ஆளுநரின் வாகனம் அரு கில் வந்தபோது போராட்டக்காரர்கள் அருகில் வந்துவிடக்கூடாது என்பதற் காக 2 காவல்துறை பேருந்தை நிறுத்தி மறித்தோம்.

ஆளுநருடன் 14 கான்வாய் வாகனங் கள் வந்தன. இந்த வாகனங்கள் சென்ற பின்னர் வந்த தனியார் வாகனம் ஒன் றின் மீதுதான் ஒரு கருப்புக் கொடி விழுந்தது. இதுதான் உண்மையில் நடந்த சம்பவம்.

கற்கள், கட்டையால் ஆளுநர் தாக் கப்பட்டார் என்பது உண்மைக்கு மாறான தகவல். அதே போல, புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதும் தவறான செய்தி. இந்த சம்ப வம் நடந்தது ஏப்ரல் 18ஆ-ம் தேதி என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இது நடந்தது ஏப்ரல் 19ஆம் தேதி.

இந்த சம்பவம் தொடர்பாக வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். இது வரை 53 சாட்சியங்களை விசாரித்துள் ளோம்.

விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். புலன் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

No comments:

Post a Comment