சென்னை: அக்.1 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக் கும் வகையில் இந்த அரசு பொறுப் பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று உரைத்த காந்தியாரின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத் திடும்வகையில் கிராம சபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடி வமைக்கப்பட்டு, ஊராட்சிகளில் இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள்: அரசின் மூலம் செயல்படுத்தப்படும் முத்தான திட் டங்களான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, பள்ளிகளில் காலை உணவு, புதுமைப் பெண், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமை ஆகிய திட் டங்கள் குறித்து பொதுமக்கள் அனை வரும் தெரிந்துகொள்ளும் விதமாக திட்ட செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்த குறும் படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளி லும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்க உள்ளார்.
அமைச்சர்கள், தங்கள் மாவட்டங் களில் நடைபெறும் கிராம சபை கூட் டங்களில் கலந்துகொள்வர். கிராமசபை கூட்டத் துக்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளன. இதில், பொதுவான விவாதப் பொருளாக, ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment