தருமபுரி மாவட்டத் தில், 'பண்ட ஹள்ளி' கிராமத்தின் எளிய விவசாயியான பெரியவர் தோழர் முனியா அவர்கள் சிறந்த கொள்கை பற்றாளர்; முதிர்ச்சியானவர் 'சன்' தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் திரு.மு.குணசேகரனின் தந்தையார். அவர் தனது 97ஆவது வயதில் சென்னை ஷெனாய் நகரில் உள்ள குணசேகரன் அவர்களது இல்லத்தில் இன்று (11-10-2023) விடியற்காலை முடிவெய்தி விட்ட செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
ஊடகவியலாளர் மு. குணசேகரன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களது மகளான திருமதி அன்புமதியின் வாழ்விணையர்.
மறைந்த பெரியவர் 97 வயதிலும் நிறை வாழ்வு வாழ்ந்தார். அவரை அவரது சம்பந்தி யான கவிஞர், அவரது துணைவியார் வெற்றிச் செல்வி, மருமகள் அன்புமதி ஆகியோர் இறுதிவரை சிறப்புடன் எவ்வித குறையுமின்றி கவனித்து வந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது!
அவரை இழந்து வருந்தும் அவரது அன்புமகன் மு.குணசேகரன், மருமகள் அன்புமதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
11.10.2023
No comments:
Post a Comment