ஆண்டிமடத்தில் நடைபெற்ற கழக தெருமுனைப் பிரச்சார கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

ஆண்டிமடத்தில் நடைபெற்ற கழக தெருமுனைப் பிரச்சார கூட்டம்

ஆண்டிமடம், அக்.3- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்  28.9.2023 வியாழன் அன்றுமாலை 5 மணியளவில் நடை பெற்றது. ஆண்டி மடம் கடைவீதியில் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன் தலைமையேற்க, மாவட்ட இளைஞரணி தலைவர் க. கார்த்திக் வரவேற்புரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் இரா.திலீபன், ரத்தின. ராமச்சந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் மா. சங்கர், மாவட்ட ப.க.தலைவர் நல்லாசிரியர் தங்க.சிவமூர்த்தி, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன்,ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ. இராமகிருஷ்ணன், நகரத் தலைவர் ந. சுந்தரம், நகர துணைத் தலைவர் சுந்தரவடிவேல், நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில்,

ஒன்றிய இளைஞரணி செயலாளர் 

இரா. பாலமுருகன் அமைப்பாளர் இ.வினோத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன்,

மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றியதற்கு பின் னர் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா குறித்தும், முத்தமிழறிஞர் கலை ஞரின் சிறப்பு குறித்தும், தந்தை பெரியாருடைய உழைப்பு,பாரதிய ஜனதா அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றி னார்.நகர செயலாளர் டி.எஸ்.கே அண்ணா மலை நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி ஒன்றிய செயலாளர் துரை. பிரபாகரன், தா.பழூர் ஒன்றிய தலைவர் ராமச் சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்கடா சலம், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வ குமார், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் மு.ராஜா,மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா. ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் ப.மதியழகன், சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் எஸ்.எஸ்.திராவிடச் செல்வன், மாவட்ட மாணவர் கழக தலைவர் த.சிவமணி, எஸ்.ஆர்.எம். சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இன்பத் தமிழன் சஞ்சய், அருண், தினேஷ், பொன் பரப்பி வை. சுந்தரவடிவேல், குழுமூர் சுப்ப ராயன் மீன்சுருட்டி ரஞ்சித் குமார்ஆண்டிமடம் ப. சுந்தரமூர்த்தி,கோவில் வாழ்க்கை பிரபு கார்த்தி,பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமான தோழர் களும் பொதுமக்களும் சிறப்பாக பங்கேற்றனர்.


No comments:

Post a Comment