மணிப்பூர் பிரச்சினையில் தப்பிக்க முடியாது மோடி மீது காங்கிரசு சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

மணிப்பூர் பிரச்சினையில் தப்பிக்க முடியாது மோடி மீது காங்கிரசு சாடல்

புதுடில்லி,அக்.26 - மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி 175 நாள்களாகும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து முழுவதும் விலகி நின்று பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி யின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ‘மணிப்பூரில் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் பெரும்பான் மையாக இருக்கும் நிலையில், அவர்களையும் முதலமைச்சரையும் இதுவரை பிரதமர் அழைத்து ஏன் பேசவில்லை?

மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச் சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அவரது மாநில பிரச்சினைக்காக ஏன் பிரதமரை சந்திக்க முடிய வில்லை?

அனைத்து விவகாரங்கள் குறித்து பேசும் பிரதமர் மோடி யால் மணிப்பூர் பிரச்சினை குறித்து 4-5 நிமிஷங்களுக்கு மேல் ஏன் பேச முடியவில்லை?

மணிப்பூரின் பல்வேறு சமூகத் தினரால் நிராகரிக்கப்பட்ட மாநில முதலமைச்சரை ஏன் இது வரையில் மாற்றவில்லை?

மணிப்பூர் கலவரம் தொடங்கி யதில் இருந்து பிரதமர் மோடி தலையிடாமல் அந்த மாநிலத்தை அப்படியே கைவிட்டதை நாட்டு மக்களும், சமாதானம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர் களும் கவனித்துக் கொண்டிருக் கின்றனர். இந்தப் பிரச்சினைக்குப் பொறுப்பேற்பதில் இருந்து பிரத மர் மோடி தப்பிக்க முடியாது’ என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment