கல்வி என்பது நாடு முழுவதும் வணிகமயமாகிவிட்டது மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

கல்வி என்பது நாடு முழுவதும் வணிகமயமாகிவிட்டது மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

மதுரை, அக்.3 இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கல்வி தனியாரின் கட்டுப்பாட்டில் வணிகமயமாகி வருகிறது என மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார். 

மதுரையில் மக்கள் கல்விக்கூட்டி யக்கம் சார்பில் ஆசிரியர்களின் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு மேனாள் நீதிபதி கிருஷ் ணய்யர் சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது. இதற்கு மாநில ஒருங் கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். மாநில ஒருங் கிணைப்பாளர் ரா.முரளி முன் னிலை வகித்தார். அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் ம.சிவராமன் வரவேற்றார். 

இதில் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசியதாவது: ''இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் மேலைநாடுகள் கல்வியை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்தியாவில் அரச மைப்பு சட்டம் உருவாக்கும்போது அதில் இடம் பெற்றவர்களில் அம்பேத்காரைத் தவிர மற்றவர்கள் உயர்ஜாதியினர் என்பதால் கல்வி உயர்ஜாதியினருக்கு மட்டும்தான் என்ற உள்நோக்கத்தோடு வரை யறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அரசமைப்பு சட்டத்தில் கல்வி என்பது அடிப்படை உரிமை இல்லை. ஆனால் கல்வி நிலை யங்களை ஏற்படுத்துவது அடிப் படை உரிமையாக உள்ளது. எனவே இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கல்வி பெயரளவில் மட்டுமே உள்ளது. இதனால் தனியார் மற்றும் கார்ப் பரேட் நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் கல்வி உள்ளதால் பெரும் வணிகமயமாகிவிட்டது. இதில் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் உள்ளனர். ஆனால் மேலை நாடுகளில் முழுக்க, முழுக்க கல்வி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் வளர்ச்சியை நோக்கி அந்த நாடுகள் செல்கின்றன. 

இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகு கின்றன. இதில் அனைத்து துறைகளும் அவுட்சோர்சிங் என்ற முறையில் தனியார்மயமாகி வருகிறது. இதில் ஒன்றிய, மாநில அரசுகளில் 90 சதவீதம் ஒப்பந்த முறைக்கு மாறிவருகிறது. ரயில்வே யில் 18 லட்சம் தொழிலாளர்கள் இருந்தால் 7 லட்சம் தொழிலா ளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர் களாக உள்ளனர். தனியார் மயமே சிறந்ததென உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கிறார்கள். அதில் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் உள்ளனர். எந்தவொரு உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும். அதற்கு சங்கங்கள், அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும். 

தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தே தனியார் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளனர்." 

இவ்வாறு ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment