கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்தது குறித்து முழு ஆவணங்களையும் சமர்ப்பிக்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உலகளாவிய பசி அட்டவணை 2023 இல் இந்தியா 125 நாடுகளில் 111ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மோடி அரசு இதை மறுத்துள்ளது.
தி இந்து:
* அக்டோபர் 2 ஆம் தேதி, பீகார் அரசு தனது ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), பட்டியலிடப்பட்ட ஜாதிகள் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) மொத்த மக்கள் தொகையில் 84% பேர் உள்ளனர் என்று தரவு காட்டுகிறது. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் 50% சட்ட உச்சவரம்பு நீக்கப்பட வேண்டுமா என்ற விவாதத்தை இது மீண்டும் தொடங்கியுள்ளது என்கிறார் உதவி பேராசிரியர் கலையரசன்.
டெக்கான் ஹெரால்ட்:
* ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிக்க ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டுமாம், இது ஹிந்து சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறதாம். ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே அறிவுரை. - தேர்தல் வருகிறதல்லவா?
பயனீர்:
* ஆதார் சட்டம் போன்ற சட்டங்களை பண மசோதாவாக நிறைவேற்றுவது தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக விசாரிக்கக் கூடாதாம். மோடி அரசு மனு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிவிப்புகளை மக்களிடம் விவாதிக்காமல் நிறைவேற்றக் கூடாது என தேர்தல் ஆணைய மேனாள் தலைவர் குரேஷி கருத்து.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment