இதுதான் பி.ஜே.பி. மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

இதுதான் பி.ஜே.பி. மாடல்!

பி.ஜே.பி. ஆளும் மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனில் சிலரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை  செய்யப் பட்டு தூக்கி வீசப்பட்ட 11 வயது சிறுமி அரை நிர்வாணமாக ரத்தம் வடிய வடிய, வீடு வீடாகச் சென்று உதவி கேட்டாள் அவளுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அதுமட்டுமல்ல; அந்தச் சிறுமி தேனீர் கடையில் தண்ணீர் கேட்டபோது கடையை மூடிவிட்டு சென்ற கொடூரமும் நடந்தது. அந்தச் சிறுமி இப்போது எந்த நிலைமையில் இருக்கிறார்? அவருக்கு அரசு என்ன உதவி செய்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தளவுக்குக் கொடுமை இழைக்கப்பட்டு பிறப் புறுப்பில் ரத்தம் வழிய வழிய அரை நிர்வாணமாக அந்தச் சிறுமி அங்கிருக்கும் வீடுகளுக்குச் சென்று உதவி கேட்கும் காட்சிப் பதிவுகள் காண்பவர்களின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருந்தது.

இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, காவல் துறையினர்  விசாரணையில் இறங்கினர். இதில், அந்தச் சிறுமி வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் திசை மாறிச் சென்றதும், இதைப் பயன்படுத்தி ஒரு ஆட்டோ ஓட்டுநரும் அவரது நண்பர்களும் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர், ஓடும் ஆட்டோவில் இருந்து தள்ளி விட்டதும் எத்தனைக் கொடூரம்! இதையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில் குற்றவாளியான பாரத் சோனி (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த சமயத்தில், இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டதால், ஆளும் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப் பினர்களும் அச்சிறுமியின் வீட்டிற்குச் செல்வதும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்ததுதான் மிச்சம்! மேலும், அந்தச் சிறுமிக்கு பல லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்குவோம் என்றெல்லாம் அரசு அறி வித்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை ஒரு சிறு உதவி கூட கிடைக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் கூறுகையில், "நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள். எங்க ளுக்கு எல்லாம் உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். மருத்துவமனையில் இருந்து என் மகள் வீடு திரும்பும் போது, 600 ரூபாய் கொடுத்தார்கள். அதன் பின்னர், எங் களுக்கு அரசாங்கமோ, அதிகாரிகளோ எந்த உதவியும் செய்யவில்லை. என் மகள் வாழ்க்கை வீணானதுதான் மிச்சம்" எனக் கண்ணீருடன் கூறினார். 

 இந்த நிலையில் அரசின் சார்பில் ரூ.1500 தந்த தாகவும் அதைக் கொண்டு வந்த ஊழியர் பயணச் செலவிற்கான பணத்தை எடுத்துவிட்டு, மீதம் 600 ரூபாயைக் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் கூறினார். 

 தேர்தல் காலமாக இருப்பதால் அரசு எந்த ஒரு உதவியும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக மத்தியப்பிரதேச அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதைப் போன்ற ஒரு கொடுமை தமிழ்நாட்டில் நடந் திருந்தால் சங்கிகளும், ஆளுநரும், பார்ப்பன ஏடுகளும் எப்படி எப்படி எல்லாம் வாய்க்கு வந்தவாறு வசைப்பாடி தூற்றி இருப்பார்கள்!

"இதுதான் திராவிட மாடல் அரசின் இலட்சணம்!" என்று ஏக வசனத்தில் பேசி இருக்க மாட்டார்களா?

காஷ்மீர் மாநிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆஷிபா என்ற சிறுமியைக் கடத்திச் சென்று கோயில் கருவறையில் வைத்து, கோயில் அர்ச்சகன் உள்பட பலரும் சேர்ந்து பல நாட்கள் கூட்டு வன்புணர்வு செய்து அடித்துக் கொன்று வெளியில் தூக்கி எறியவில்லையா?

விசாரணை நடத்திய காவல்துறைப் பெண் அதிகாரி யிடம் "நீங்களும் பிராமணர், நாங்களும் பிராமணர் - இந்த நிலையில் எங்களைத் தண்டிக்க நீங்களும் முயற்சி செய்யலாமா?" என்று ஜாதியை வைத்துப் பேரம் பேசியதுண்டே - குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி பிஜேபியினர் ஊர்வலம் நடத்தினார்களே - அதை அந்த அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நல்ல செய்தியே. 

கோயில் 'விபச்சாரிகளின் விடுதி' என்று காந்தியார் சும்மாவா சொன்னார். 'பா.ஜ.க. மாடல்' என்பது இதுதான் - தெரிந்து கொள்வீர்!

No comments:

Post a Comment