புதுச்சேரி, அக்.2 ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாள் விழா புதுவையின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி பிள்ளை தோட்டம் பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாவட்ட செயலாளர் கி.அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி, கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், காப்பாளர் இர.இராசு, திராவிடர் தொழிலாளர் கழக செயலாளர் கே.குமார், மகளிர் பாசறை தலைவர் சிவகாமி சிவக்குமார், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்செல்வன், புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பெரியார் பெருந்தொண்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை யில் புதுச்சேரி மாவட்ட கழக தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. அனைத்துக் கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். கழக காப்பாளர் இர.இராசு சமூகநீதி உறுதிமொழி யைச் சொல்ல தோழர்கள் உறுதியேற்றனர். நிகழ்வில் பெ.ஆதிநாராயணன், இரா.ஆதி நாயணன், நியூபிலால் உணவகம் முகமது நிஜாம், உழவர்கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன், வில்லியனூர் கு.உலகநாதன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் பா.குமரன், மருத்துவரணி தலைவர் ச.முகேஷ், உழவர் கரை நகராட்சி கழக செயலாளர் கா.நா.முத்து வேல், சேத்துப்பட்டு ஏ.சிவகுமார், மாணவர் கழக ச.பிரபஞ்சன், க.செல்லமணி, களஞ்சியம் வெங்கடேசன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.சிவராசன், திருநாவுக்கரசு, சிவ.இள.கோவலன், ப.தேவகி, ப.தமிழ்பிரியன், தர்மலிங்கம், செய்யது ஷேக், அபுபக்கர்,
தி.பிரபாகரன், து.கல்பனா, து.சிலம்பரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பெரியார் படிப்பகம்
புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்ப கத்தில் பெரியார் சிலைக்கு கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, மகளிர் பாசறை சிவகாமி சிவக்குமார் ஆகி யோர் முன்னிலையில் கழக தோழர் முத்து வேல் ஒலி முழக்கத்துடன் மாலை அணி வித்தார். படிப்பகத்தின் கீழ் சமூகநீதி உறுதி மொழியை கழக தோழர்கள் ஏற்றனர்.
கதிர் காமம்
புதுச்சேரி கதிர்காமம் மாவட்ட கழக காப்பாளர் இர.இராசு இல்லத்தில் மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் கழக அமைப்பாளர் இரா.சடகோபன், பொதுக் குழு உறுப்பினர் விலாசினி, மகளிரணி தலைவர் எழிலரசி, மகளிர் பாசறை சிவகாமி ஆகியோர் முன்னிலையில் கழக கொள்கை முழக்கத்துடன் கழகக் கொடி ஏற்றப்பட்டது. பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு சமூகநீதி உறுதி மொழியை கழக தோழர்கள் ஏற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப் பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது.
ஆனந்தா நகர்
புதுச்சேரி கதிர்காமம் ஆனந்தா நகரில் உள்ள உழவர்கரை நகராட்சி கழகத் தலைவர் சு.துளசிராமன் இல்லத்தில் கழகக் கொடியினை மண்டல காப்பாளர் இர.இராசு, மகளிரணி தலைவர் எழிலரசி, மாவட்ட செயலாளர் கி.அறிவழகன், மாவட்ட கழக அமைப்பாளர் இரா.சடகோபன், மகளிர் பாசறை சிவகாமி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கழக தலைவர் வே.அன்பரசன் கழகக் கொடியினை ஏற்றினார். வீட்டின் முன்பு பெரியார் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சமூகநீதி உறுதி மொழியினை ஏற்றினர். துளசிராமனின் மகள் விஜயசாந்தி - தீபக் ஆகியோருக்கு கவிஞர் திருமணம் நடத்தி வைத்ததின் 2ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பெயர்த்தி தீ.ஆதிரா கேக் வெட்டினார். அனைவருக்கும் இனிப்பு, காரவகை தீனிகள் வழங்கப்பட்டன.
கதிர்காமம், தந்தை பெரியார் நகர்
புதுச்சேரி மாவட்ட கழக அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் இரா.சடகோபன் இல்லம் இருக்கும் தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கதிர்காமம் தி.மு.க. தொகுதி தலைவர் வடிவேல் தலை மையில், புதுச்சேரி மாவட்ட தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட காப்பாளர் இர.இராசு, மகளிர் அணி தலைவர் எழிலரசி, மாவட்ட கழக செயலாளர் கி.அறிவழகன், மகளிர் பாசறை தலைவர் சிவ காமி, தேவகி, பழனி, மாணவர் கழக தோழர் ச.பிரபஞ்சன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
மேட்டுப்பாளையம்
திராவிட தொழிலாளர் அணி தலைவர் வீர.இளங்கோவன் இல்லத்தில் கொடியேற்றப் பட்டு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
இராமலிங்கம் நகர்
விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.சிவராசன் இல்லத்தில் அதிகாலையிலேயே கழக கொடி ஏற்றப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
மூலைக்குளம்
மூலைக்குளத்தில் உள்ள பகுத்தறிவுப் பகலவன் பெரியார் சிலைக்கு மூலைக்குளம் சாம்பசிவம், நடராசன், தோழர் தெய்யலகம், இரா.சீனுவாசன், தமிழ்ச்செல்வன், தையலகம் முத்து ஆகியோர் முன்னிலையில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ரெட்டியார்பாளையம் ஜெயா நகர்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்; இந்தியன் வங்கியின் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்ற எழுத்தாளர் கைலாசம் நடேசன் இல்லத்தில் விடுதலை வாசகர் வட்டச் செய லாளர் ஆ.சிவராசன், கைலாசம் நடேசன் முன் னிலையில் கழக ஒலிமுழக்கத்துடன் கொடி யேற்றினார். பெரியார் படம் முன்பு சமூகநீதி உறுதிமொழி வாசிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. மதிய உணவாக பிரியாணி துப்புரவுப் பணி யாளர்கள் 15 பேருக்கு வழங்கப்பட்டது. நடே சனின் துணைவியார் நன்றி நவின்றார்.
கோட்டை மேடு, அரியாங்குப்பம், ஏம்பலம், இராதாகிருஷ்ணா நகர், பாகூர், இருளன் சந்தை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, வில்லியனூர், மடுகரை போன்ற ஊர்களில் பெரியார் சிலைகளுக்கு மலர் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. பெரியார் படங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கொள்கை முழக்கத்துடன் ஸநாதன எதிர்ப்பு, ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு முழக்கங்களே மேலிட்டன.
புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்திய கூட்ட மைப்பு, அரசு ஊழியர்கள் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் தலைமையில் செயலாளர் புகழேந்தி, பொருளாளர் சுமித்ரா, பூவிழி, அருள் ஆகியோர் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தி.மு.க.
புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில பெரியார் சிலைக்கு மேனாள் அமைச்சர் செந்தில்குமார், சம்பத் ஆகியோர் பெரியார் சிலைக்கு ஏராளமான தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பூ.மூர்த்தி, உருளையன்பேட்டை கோபால், மாணவர் கழக மணிமாறன், தகவல் தொழில் நுட்ப அணி காயத்ரி சிறீராம், பெல்லாரி கிருஷ்ணமூர்த்தி, மாறன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணைத் தலைவர் அருள் (எ) சுப்ரமணியன், மூர்த்தி, இரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வி.சி.க.
புதுச்சேரி மாநில வி.சி.க. முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில், மேனாள் தலைவர் தலையாரி, செயலாளர் அமுதவன், தமிழ்குமரன், தாஸ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான தோழர்களுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மாநில தலைவர் அ.மு.சலீம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாரா.கலைநாதன், து.கீதநாதன், நவீன் தனராமன், எல்லை சிவக்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் தலைமைக் கழக பொறுப்பாளர் பெருமாள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் முன்னிலை யில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வில் ஏராளமான தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment