முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் இறுதி மரியாதை - இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் இறுதி மரியாதை - இரங்கல்

 ஊடகவியலாளர் மு. குணசேகரனின் தந்தையார் முனியா மறைவு

படம் 1: தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2023) சென்னையில், சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான  மு. குணசேகரன் அவர்களின் தந்தையார் வயது மூப்பின் காரணமாக மறைவுற்ற முனியா அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை  செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சட்டமன்ற உறுப்பினர்   எம்.கே.மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்  த. மோகன்,  மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழுத்தலைவர்  நே. சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.

படம் 2: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்-வெற்றிச்செல்வி சம்பந்தியும், சன் செய்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ஊடகவியலாளர் மு.குணசேகரன் தந்தையாருமாகிய தருமபுரி மாவட்டம் பண்டஹள்ளி முனியா (வயது 97) இன்று (11.10.2023) அதிகாலை 5மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். சென்னைஅமைந்தகரை - செனாய் நகரில் உள்ள  அவரது இல்லத்தில் இன்று காலை  9 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைவுற்ற முனியா உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, மு.குணசேகரன்-அன்புமதி குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.  தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த முனியா உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி  மு.குணசேகரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment