- இரா.இரத்தினகிரி
புத்தர் ஒரு நாள் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்! அப்போது சீடர்களிடம் கேட்டார்! "மனிதனின் வயது என்ன?" என்று! அதற்கு ஒரு சீடர், உடனே 'நூறு' என்றார். மற்றொருவர் இல்லை, இல்லை! 60தான் என்று! "பஞ்சாங்கம் அப்படித்தான் சொல்லுகிறது" என்றார். "இல்லை, இல்லை 33தான்" அதுதான், ஒரு தலைமுறையின் வயது! அதற்கு மேல் சொல்வது தவறு என்றார் மற்றொருவர்! இப்படி ஆளுக்கு ஒன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு சீடர் எழுந்து நின்று எங்களுக்குத் தெரியவில்லை. "நீங்களே சொல்லி விடுங்கள்" என்றார். அப்போது புத்தர் சொன்னார், "நீங்கள் சொன்னபடி மனிதனின் வயது நூறோ, அய்ம்பதோ, முப்பத்தி மூன்றோ இல்லை" - அப்படியானால் "எவ்வளவு?" சீடர்கள் எல்லோரும் கூட்டாகக் கேட்டார்கள்.
"மனிதனின் வயது ஒரு கணம்! ஒரு கணம்தான்! அதாவது ஒரு கணம்தான்! எப்படி ஒவ்வொரு எழுத்தாகச் சேர்ந்து ஒரு வார்த்தை அமைகிறதோ, எப்படி வார்த்தை வார்த்தையாகச் சேர்ந்து ஒரு வாக்கியம் அமைகிறதோ அப்படித்தான்! என்று! நற்குணங்களாலும், நல் எண்ணங்களாலும், நற் செயல்களாலும் வாழ்நாட்கள் அமைந்தால் வயது தொண்ணூறு ஆனாலும் பரிமள மணம் வீசும்! மனோரஞ்சிதம் வாசனை வந்து மனத்தை ரம்மியமாக்குகிறதோ அப்படித்தான் வாழ்க்கை என்பது! நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் அமைகிறபோதுதான் வாழ்க்கை பூரணம் ஆகும். ஆகவே, ஒவ்வொரு கணத்தையும் கவனமாக எண்ணி எண்ணிச் செலவிடுங்கள். அப்போதுதான் வாழ்க்கை உங்களுக்கும் பயன்படும் - சமுதாயத்துக்கும் பயன்படும்" என்றார்.
No comments:
Post a Comment