ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம், ம.பியில் ராகுல் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் வேகமாக செல்வதாக காட்டுவதற்கு பாண்டியன், பொதிகை ரயில்களின் வேகத்தை குறைக்கும் ரயில்வே.

தி இந்து:

* சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக பெண் வேட்பாளர்களை  நிறுத்தும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

தி டெலிகிராப்:

* சங்பரிவார் ஜாதி விளையாட்டை சிறப்பாக விளையாடுகிறது. ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைவரையும் ஒருவரையொருவர் எதிர்த் துப் போரிட வைப்பதே அவர்களின் முறை என்கிறார் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய்

- குடந்தை கருணா


No comments:

Post a Comment