23.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காக அக்டோபர் 26 முதல் பேருந்து பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 மோடி அரசின் மருத்துவ கவுன்சிலின் தவறான அணுகுமுறையால் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 83 மருத்துவ இடங்களை மாநில அரசே கலந்தாய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த வாக்கு இயந்திரம், வாக்களிப்பு தாள் (விவிபேட்)ஆகியவை தயாரிக்க ஓராண்டு வரை கால அவகாசம் தேவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
👉 87 ஜாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் கோரிக்கையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க உள்ளது. மாநிலத்தில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும், ஆனால் இன்று வரை ஆணையத்தின் பரிந்துரையின் மீது எந்த சாதகமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் என்சிபிசி தெரிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தி யதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி அரசுப் பள்ளி களில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, தனியார்-பொதுக் கூட்டாண்மை மூலம், மதுரை மாநகராட்சி காலை உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி டெலிகிராப்:
👉 நான் அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறேன், உண்மைக்குப் பின்வாங்கும் சக்திகள் தேவையில்லை.... இந்தப் போராட்டத்தை நான் தொடர்வேன்: பணப்பட்டு வாடா குறித்த கேள்விக்கு தி டெலிகிராப்பிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பேட்டி.
👉 உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நவராத்திரி மற்றும் தசரா காலங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தடை விதித்துள்ளார். இது குறித்து உ..பி.யில் வாழும் வங்காளிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 கடந்த ஆண்டு அக்னிபாத் திட்டத்தின் கீழ் குறுகிய கால ராணுவ ஆட்சேர்ப்பில் தேர்ச்சி பெற்ற அக்னி வீரர் சியாச்சின் பனிப்பாறையில் தடை செய்யப்பட்ட பகுதியில், உயிரிழந்தார். அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்ற மோடி அரசின் கொள்கைக்கு மேனாள் ராணுவ வீரர்கள் கண்டனம்.
👉தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கான உச்ச வயது வரம்பு வயது வரம்பு 45 லிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment