காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி தகவல்

போபால், அக். 3-  மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 30.9.2023 அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓபிசி) எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும்.

ஒன்றிய அமைச்சரவை செயலா ளர் மற்றும் துறை செயலாளர்கள் உள்ளிட்ட 90 அரசு உயர் அதிகா ரிகள்தான் நாட்டை ஆட்சி செய்கிறார்கள்.

கொள்கைகள் உருவாக்கம் மற் றும் சட்டம் இயற்றுவதில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு எந்த பங்கும் இல்லை.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர்களுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அரசு உயர் அதிகாரிகளும் சட்டங் களை இயற்றுகிறார்கள்.

நாடு முழுவதும் நிலவும் ஊழலின் மய்யமாக மத்தியப் பிர தேசம் விளங்குகிறது.

வியாபம் உள்ளிட்ட ஊழல் கள் புரட்டிப் போட்டுள்ளது. இங்கு எம்பிபிஎஸ் பட்டம் விற்கப்படுகிறது. தேர்வு வினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியாகி விடுகின்றன.

இங்கு கடந்த 18 ஆண்டுகளில் 18 ஆயிரம் விவசாயிகள் தற் கொலை செய்துள்ளனர். சராசரி யாக தினமும் 3 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள் ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment