தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,அக்.14- ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேரை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருக் கிறது. பணகுடியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக் கப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். அறிஞர் அண் ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி கொண் டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிக ளில் நன்னடத்தையோடு இருக்கும் கைதி களை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் பாளை யங்கோட்டை சிறையில் இருக்கும் 9 ஆயுள் சிறை கைதிகளையே விடுதலை செய்வதாக சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 113ஆவது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முன்விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் சிறை கைதிகள் 9 பேரும் பணகுடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு நெல்லை அமர்வு நீதிமன்றத்தால் 1999இல் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே இவர்களை அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி விடு தலை செய்துள்ளது. இதுவரை 344 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ள தாகவும் சிறைத்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment