தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் போதைப் பொருள் கடத்திய 9634 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் போதைப் பொருள் கடத்திய 9634 பேர் கைது

சென்னை, அக். 2-  போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களில் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 812 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ் நாடு காவல்துறை தொடர் நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

கடந்த மாதம் 12 முதல் 28ஆ-ம் தேதி வரையிலான 16 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 8 பெண்கள் உள்ளிட்ட 223 பேர், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற் பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களி டமிருந்து ரூ.40 லட்சம் மதிப் பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் போதைப் பொருள் தொடர்பாக 6,824 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 812 வெளி மாநிலக் குற்றவாளிகள் உட்பட, மொத்தம் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 17,330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெரா யின், 24,511 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 137 பேர் குண்டர் தடுப்புச் சட்டத் தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் விற் பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் கட்டணமில்லா தொலைப் பேசி எண் 10581 மூலமா கவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் குறுந்தகவல், புகைப்படம் மூல மாகவும் மற்றும் spnibcid@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாக வும் தெரிவிக்கலாம்.

அனைத்துமாவட்டங்களுக்கும் சிறப்பு வாட்ஸ் அப் எண் தரப் பட்டுள் ளது. போதைப் பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற் றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் களை பொது மக்கள் தெரிவித்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்கு நர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment