மேனாள் கேப்டன் களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோ ருக்கும் மேனாள் கமாண் டர்களான அமித் நாக் பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா ஆகியோ ருக்கும் ராகேஷ் என்பவ ருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்க ளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய கடற்படை யில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்த 8 அதிகா ரிகள் கத்தாரில் ‘தஹ்ரா குளோபல் டெக்னா லஜிஸ் அண்ட் கன்சல் டென்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிறுவனம் கத் தார் ராணுவத்துக்கு சேவைகளை வழங்கி வந் துள்ளது. மேலும், இந்த நிறு வனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை கத்தார் இத்தாலிய நிறுவ னத்துடன் இணைந்து உரு வாக்கி வந்துள்ளது.
இந்நிலையில், இந்த நீர் மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசிய விவ ரங்களை இந்த 8 அதிகாரி கள் இஸ்ரேல் அரசு டன் பகிர்ந்து கொண்டதா கவும் இதனால், கத்தார் அரசு இவர்களைக் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவர்களது கைதுக்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வில்லை.
இந்திய அரசு ஆலோசனை
இந்த 8 இந்திய கடற் படை மேனாள் அதிகாரி களை கத்தார் அரசு கடந்த ஆண்டு கைது செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவர்கள் தனி மைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பலமுறை பிணை கோரி விண்ணப்பித்தனர்.
ஆனால், கத்தார் நீதி மன்றம் அவர்களுக்கு பிணை வழங்கவில்லை. இந்த கைது நடவடிக்கை குறித்து கடந்தஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், “இது முக்கியத் துவம் வாய்ந்த ஒரு விவ காரம். கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவ சியம்” என்று தெரிவித் தார். இந்நிலையில், தற் போது அவர்களுக்கு மரண தண்டனை விதிப் பதாக கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து வெளியுற வுத்துறை அமைச்சகம் கூறு கையில் “கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள 8 இந்தி யர்கள் மீதான தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. விரி வான தீர்ப்பு விவரங்களை எதிர்நோக்கியுள்ளோம்.
அவர்களின் குடும்பத் தார்களுடன் தொடர் பில் இருக்கிறோம். இவர்களை மீட்பது தொடர் பான சட் டவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதுதொடர் பாக சட்ட வல்லுநர் குழுவு டன் கலந்தாலோசனை நடத்தப்படுகிறது. இதை முக்கியமான விவகார மாக கருதி தீவிரமாக பின்தொடர்கி றோம்.
கத்தார் அதிகாரிகளு டனும் பேச்சுவார்த்தை முயற்சியில் இறங்கியுள் ளோம்” என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment