மெட்ரோ ரயில்களில் 84 லட்சம் பேர் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

மெட்ரோ ரயில்களில் 84 லட்சம் பேர் பயணம்

சென்னை, அக்.3 - நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேர் பயணம் செய்தனர். மார்ச் மாதத்தில் 69 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகள் பயணம் செய்தனர். மே மாதத்தில் 72 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோல் ஜூன் மாதத்தில் 74 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

இது போல் பல மடங்கு அதிகரித்து ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பேர் பயணம் செய்தனர். ஆகஸ்டு மாதத்தில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment