சென்னை,அக்.14- நகராட்சி நிர்வாகத் துறையில் 83 பேருக்கு பணி நியமன ஆணைகளை அந்தத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை வழங்கினார்.
இது குறித்து சென்னை பெரு நகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல் பட்டு வரும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம், அதன் கட்டுப்பாட் டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்ற 48 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வியாழக் கிழமை வழங்கினார்.
இதில் 32 பேர் இளநிலை உதவி யாளர்கள், 16 பேர் தட்டச்சர்கள் ஆவர்.
மேலும், மாநகராட்சிகள், நக ராட்சிகளில் பணிக் காலங்களில் இறந்த, நிரந்தரப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 35 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களையும் சேர்த்து இதுவரை 1,336 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஹனீஸ் சாப்ரா, நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், பேரூ ராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், நகராட்சி நிர்வாக இயக் குநர் சு.சிவராசு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment