பெங்களூரு, அக். 3- கருநாடக மாநிலத்தில், முற்போக்குச் சிந்தனையா ளர்களான எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவா பயங்கரவாதிகளான மதவெறியர்களால் கொடூரமான முறையில் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வரிசையில், மடாதிபதி நிஜகுணநாதா, அமைச்சர்கள் சதீஷ் ஜர்கிகோலி, பிரியங்க் கார்கே, தினேஷ் குண்டுராவ், எழுத் தாளர்கள் தேவனூர் மகாதேவ், பர்குர் ராமச்சந்திரப்பா, எஸ்.ஜி. சித்தராமையா, மருலசித்தப்பா, பாஸ்கர் பிரசாத், பேராசிரியர் கே.எஸ். பகவான், வீரபத்ரப்பா, பஞ்சகெரே ஜெயபிரகாஷ், வசுந் தரா பூபதி, பி.டி.லலிதா நாயக் மற்றும் பி.எல். வேணு, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சேட்டன் என 61 பேர் கொலை செய்யப்பட உள்ளனர் என்று மிரட்டல் கடிதங்களும் வெளியாகி வந்தன.
இதுதொடர்பாக கருநாடக அரசின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், தாவணகெரே-வைச் சேர்ந்த சிவாஜி ராவ் ஜாதவ் (வயது 41) என்பவரை கருநாடக காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இந்துத்துவா அமைப்பு ஒன்றின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளரான இவர், எழுத் தாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து கடிதம் எழுதியதை சிவாஜி ராவ் ஜாதவ் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், சிவாஜி ராவ் ஜாதவ் தனி நபரா? அவரது பின்னணி யில் இருக்கும் ‘இந்துத்துவா’ பயங்கரவாத இயக்கம் எது? கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலையில் இவருக்கு தொடர்பு உள்ளதா? என்றும் காவல்துறையினர்விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment