5 மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

5 மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

புதுடில்லி,அக்.16- தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்ட மன்ற காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது. எனவே 5 மாநில தேர்தல் தேதி களுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

மிசோரமில் நவம்பர் 7, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25 மற்றும் தெலங்கானாவில் நவம் பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அய்ந்து மாநிலங் களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் வெளியிடப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிர தேசம், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களை காங் கிரஸ் கட்சி நேற்று (15.10.2023) வெளியிட்டது.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் 30 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, பதன் தொகுதியில் இருந்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் போட்டியிடுகிறார். துணை முதலமைச்சர் டி.எஸ். சிங் தியோ, அம்பிகாபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி தேர்ந்தெடுத்து அறிவித்து உள்ளது. இரண்டாம் கட் டத்திற்கான மற்றொரு பட்டியல் பின்னர் வெளியிடப்படும். .

இதேபோன்று தெலங்கானா வில் 55 வேட்பாளர்கள் அடங் கிய பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. தெலங் கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தில் 144 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலையும் காங் கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதில், மேனாள் முதலமைச்சர் கமல்நாத், சிந்த்வாரா தொகுதி யில் இருந்து போட்டியிடுகிறார்.


No comments:

Post a Comment