மும்பை, அக்.26 கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. இந்த 5 நாட்களில் பங்குகளின் மதிப்பு 3.5 சதவீதம் சரிந்துள்ளது. ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பன் னாட்டு அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கள் வசமுள்ள பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதனால், பங்குச் சந்தையில் தொடர் சரிவு காணப்படுகிறது.
நேற்றைய (25.10.2023) வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 522 புள்ளிகள் குறைந்து 64,049 ஆக சரிந்தது. நிஃப்டி 159 புள்ளிகள் குறைந்து 19,122 ஆக குறைந்துள்ளது. சதவீத அடிப்படையில் சென் செக்ஸ் 0.81 சதவீதமும் நிஃப்டி 0.83 சதவீதமும் சரிந்தன. அதிகபட்சமாக இன்போசிஸ் 2.74% சரிவைக் கண்டது. அதானி எண்டர்பிரைசஸ் 2.24%, சிப்லா 2.23%, அப்பல்லோ ஹாஸ்பிட்டல் 2.21%, என்டிபிசி 1.90% என்ற அளவில் சரிவைக் கண்டன. எனினும், கோல் இந்தியா (1.37 %), டாடா ஸ்டீல் (1.13%), ஹிண்டால்கோ (0.99%) ஆகிய நிறுவ னங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தக முடிவில் ஏற்றம் கண்டன.
No comments:
Post a Comment