சென்னை, அக்.24 - சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் இன்று (24.10.2023) காலையில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கார ணமாக சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித் தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ட ரல் _ -அரக்கோணம் வழத்தடத்தில் உள்ள ஆவடியில் மின்சார ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.
அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு சென்ற மின்சார ரயிலின் 4 பெட்கள் தடம்புரண்டுள்ளன. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி செல்ல இருந்தது. இப்படி இருக்கையில் ரயில் விபத்தில் சிக்கிய தால், தரடம்புரண்ட பெட்டிகளை மீட்க ஊழியர்கள் போராடி வரு கின்றனர்.
விபத்து காரணமாக அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் ஆங் காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட பெட்டிகளை மீண் டும் சரி செய்ய சில மணி நேரங்கள் கூட ஆகலாம் என்று சொல்லபடுகிறது. அதேபோல இன்று (24.10.2023) விடு முறை தினம் என்பதால் அரக்கோணம்-சென்ட்ரல் மார்க்கமாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் குறை வாக இருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment