499 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

499 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, அக் 12  ஒப்பந்த செவிலியர்களாகப் பணிபுரியும் 499 பேருக்கு நிரந்தர செவிலியர் களாகப் பணி வழங்கப்படவுள்ளது. புதிதாக 300 செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் குறித்து சட்டப் பேரவையில் நேற்று (11.10.2023) நடந்த விவாதம் வருமாறு: 

தி,வேல்முருகன் (தவாக):  செவிலியர்கள் பணி நிரந்தரம் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் அர சிடம் தெரிவித்தனர். தற்போது டிஎம்எஸ் வளாகத்தில் ஜனநாயக ரீதியாக தங்களுடைய கருத்துகளை வலியுறுத்தினர். அந்தசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): செவிலியர்கள் என்று சொன்னால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அனுதாபம் உள்ளது. கரோனா காலத்தில் எப்படி பணியாற்றி னார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மூல மாக அவர்களின் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும்.

சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): செவிலியர்கள் போராட் டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அமைச்சரை அனுப்பி தீர்வு கண்டு இருக்கலாம். அவர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். 

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்): செவிலியர்கள் அரசின் மீது நம் பிக்கை வைத்துதான் போராடு கிறார்கள். அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு உறுப் பினர்கள் பேசினர்.

இதற்குப் பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: செவிலியர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண முதலமைச்சர் அறி வுறுத்தினார். அதன்படி, உடனடி யாக துறையின்செயலாளர் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர்களை அழைத்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற் றனர். தற்போது எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களை காலமுறை ஊதி யத்தில் (நிரந்தரப் பணி)பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 499 பேருக்கு வாழ்வு கிடைக்கவிருக்கிறது. 

300 பேர் புதிதாக நியமனம்: கலைஞர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 300 செவிலியர் பணியிடங்களை புதியதாகத் தோற்றுவித்து அதிலும் தொகுப் பூதிய செவிலியர் காலிப்பணியிடங்களை தற்காலிக செவிலியர் களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். யார் எப்போது போராட்டம் நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகின்ற இடத்துக்கு நேரிடையாகச் சென்று அவர்களு டைய போராட்டத்துக்கான காரணங்களைக் கேட்டு, அந்த போராட்டத்தை கனிவோடு இந்த அரசு பரிசீலனை செய்கிறது. அவர்களின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment