மாவட்ட கழக செயலாளர் இரா. கோவிந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி பெரியாரியல் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இராஜபாளையம் மாவட்டதிராவிடர் கழகத் தலைவர் பூ.சிவக்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்ட தலைவர் கா. நல்லதம்பி. பகுத்தறிவார்கழக மாவட்ட அமைப்பாளர் சாத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.அசோக், விருதுநகர் மாவட்டச் செயலாளர் தி.ஆதவன். திருவில்லி புத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கு.போத்திராஜ், ராஜபாளையம் நகர செயலாளர் இரா.பாண்டிமுருகன், இராஜபாளையம் ரவி ஆகியோர் முன்னிலையேறு உரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரி சாமி "தந்தை பெரியார் ஓர் அறி முகம்" என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி "பெரியாரின் பெண்ணு ரிமை சிந்தனைகள்" என்ற தலைப் பிலும், திராவிடர் கழக கிராம பிரச் சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் "பார்ப் பன பண்பாட்டு படையெடுப்புகள்" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வி.சி.வில்வம் "வாழ்வியலே பெரியாரியல்" என்ற தலைப்பிலும், "நீதிக்கட்சி சுயமரியாத இயக்க வரலாறு" என்ற தலைப்பிலும், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் "தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் சாத னைகள்" என்ற தலைப்பிலும், புரப சர் மதுரை சுப.பெரியார் பித்தன் "மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்" என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்து வருகின் றனர். திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் பெரியாரியல் பயிற் சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கி ணைத்து நடத்தினார்.
No comments:
Post a Comment