திருச்சியில் 4.10.2023 மாலை, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் சரியாக 5.30. மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் கலந்து கொள்கின்றார்.
திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்ட கழக தோழர்களே வருகிற 20.10.2023 தமிழ்நாடு முழுவதும் சுற்றி அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழங்கி வருவதற்கு ஏற்ற ஊர்தியை வழங்குவதற்கு திருச்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆகவே இந்த வேன் (ஊர்தி)அளிக்கும் நிகழ்வை நாம் விழாவாக எடுத்துச் செல்ல இருக்கிறோம் நமக்குத்தான் வேறு ஏது விழா? இதை மிகச் சிறப்பாக நடத்த நமது அனைத்து சகோதரிகளும் சகோதரர்களும் விரும்புவதால் சிறப்பாக நடத்த வேண்டும். ஆகவே 4.10.2023 மாலை சரியாக 5.30 மணிக்கு திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது தவறாமல் அனைத்து தோழர் களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கி றோம்.
இப்படிக்கு
அழைப்பு.
ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்)
தே. வால்டேர் (லால்குடி மாவட்ட தலைவர்)
ச. மணிவண்ணன் (துறையூர் மாவட்ட தலைவர்)
மற்றும் மாவட்டச் செயலாளர்கள்.
No comments:
Post a Comment