விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 2 இடங்களில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலைகளில் நேற்று (17.10.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயர செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து சிறீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள் ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், உறவி னர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment