சென்னை, அக். 9- சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடியில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தா திரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப்பகுதியில் ரூ.81.64 கோடி மதிப்பில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப்பகுதியில் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
அதேபோல், வேம்புலியம்மன் திட்டப்பகுதியில் ரூ.32.62 கோடிமதிப்பில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப்பகுதியில் ரூ.32.30 கோடியில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் ரூ.29.85 கோடியில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டிமான்ய தோட்டம் திட்டப் பகுதியில் ரூ118.53 கோடியில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ.41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பருவா நகர் திட்டப் பகுதியில் ரூ.61.13 கோடியில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
இந்த 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடி மதிப்பில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இஸ்ரேலில் இருந்து தொடர்பு கொண்ட
25 தமிழர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சென்னை, அக். 9- இஸ்ரேலில் இருந்து தொடர்பு கொண்ட 25 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சிறுபான்மையி னர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சியில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
இஸ்ரேலில் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனையின் பேரில் எங்கள் துறை மூலமாக 3 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த எண்களை தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சினைகளை அவர்கள் பதிவு செய்தால் தேவை யான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும். அதன்படி இதுவரை 25 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் களுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்கி கொடுத்து இருக்கிறோம்.
இந்திய தூதரகம் மூலமாக பதிவு செய்து இங்கு தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 7.10.2023 அன்று அவர்களிடம் விசாரித் தபோது, "நாங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளோம், எந்த விதமான பிரச்சினையும் இல்லை, பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்கிறோம்" என்று சென்னை தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் கூறியுள்ளார்.
அங்கு கல்வி பயின்று வரும் கோவையை சேர்ந்த 3 மாணவர்கள் தொடர்பு கொண்டு நாங்களும் பாதுகாப் பான நிலையில் இருக்கிறோம், தேவைப் பட்டால் அரசின் உதவியை நாடுவோம் என்று சொல்லி இருக் கிறார்கள். பல்வேறு நாடுகளில் இந்த மாதிரி பிரச் சினைகள் வரும்போது தமிழ்நாடு அரசு தாய் உள்ளத்தோடு அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து அவர்களின் இல்லம் வரை சென்று ஒப்படைக்கின்ற பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
அதேபோல் இங்கிருந்து தேவைப்பட்டால் அந்த உதவிகளை நிச்சயமாக தமிழ்நாடு அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment