பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க ரூ.32 கோடி ஒதுக்கீடு - போக்குவரத்து துறை அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க ரூ.32 கோடி ஒதுக்கீடு - போக்குவரத்து துறை அரசாணை

சென்னை,அக்.8- பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.32 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா ணையில் கூறியிருப்பதாவது:

பணிக் காலத்தில் உயிரிழந்தவர்கள்: கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களுக்கான நிதி உதவியை போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் கோரியுள்ளது.

அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1 கோடி, விழுப்புரத்துக்கு ரூ.4.1 கோடி, சேலத்துக்கு ரூ.2.2 கோடி, கோவைக்கு ரூ.3 கோடி, கும்பகோணத்துக்கு ரூ.5.9 கோடி, மதுரைக்கு ரூ.7.3 கோடி, திருநெல்வேலிக்கு ரூ.2.9 கோடி வீதம் ரூ.32.83 கோடியை வழங்க வேண்டும் என முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.

பங்கு மூலதன உதவி: இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, பணிக் காலத்தில் உயிரி ழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்காக தமிழ்நாடு போக் குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு ரூ.32 கோடியை பங்கு மூலதன உதவியாக வழங்குகிறது. இந்நிறு வனம் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதியை வழங்கும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment