வெற்றிக்கு காரணம் கடின உழைப்பு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

வெற்றிக்கு காரணம் கடின உழைப்பு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கருத்துரை

சென்னை, அக். 4 - தமிழ்நாடு அரசு சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒன்பது பேருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா சென்னையில் 2.10.2023 அன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேசுகையில்: நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். எந்தப் பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. படிக்கும் போதே செயல் முறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். புரிந்து படிப்பது முக் கியம். புதிய தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த வேண்டும். நம் முன் ஏரா ளமான வாய்ப்புகளும் தொழில் நுட்பங்களும் உள்ளன. தோல்வி யைப் பார்த்து அஞ்சக் கூடாது. முயற்சியும் கடின உழைப் பும் விடா முயற்சியும் அவசியம் என்றார் அவர்.

மேலும் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங் கும் நாடுகளில் இந்தியா வும் ஒன்று என்ற பெருமை கிடைத்துள்ளது.

ரோவரை 100 மீ. தொலை வுக்கு நகர்த்தியுள்ளோம். தென் துருவப் பகுதியில் இருந்து நிலவு தொடர்பான ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை நிலவைப் பற்றிய எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்குப் பயனுள் ளதாக இருக்கும். நாம் எந்த நோக் கத் துக்காக ‘சந்திரயான் 3’ திட்டத் தைச் செயல்படுத்தினோமோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுட்காலம் என்பது ஒரு முழு நிலவு நாள்தான் (அதாவது தோராயமாக பூமியின் 14 நாள்களுக்குச் சமம்). அதற்கு மேல் அதிலுள்ள கருவிகளை இயக்குவதற்கான சக்தி இல்லை.

அப்படி இயக்க வேண்டு மெனில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சூரிய ஒளி மின்சக்தி தான். இந்த மின்சக்தியைப் பொருத்தே திட்டத்தின் ஆயுட் கால அளவு உள்ளது. ஆனால், போதிய அள வுக்கு வெப்பம் கிடைத்தால்தான் சூரியஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.நிலவுப் பகுதியில் வெப் பம் மிகக் குறைவாகவே இருக் கும். அதாவது மைனஸ் 150 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 175 செல்சியஸ் வரை வெப்ப நிலை அளவு இருக்கும். எனவே, இந்த அளவு வெப்பத்தை வைத்து சூரிய ஒளி மின்சக்தியால் கருவி களை இயக்குவது என்பது கேள்விக்குறியாகும். இதனால் தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளைச் செயல்பட வைப்பது சந் தேகம்தான் என்றார் அவர்.

No comments:

Post a Comment