மாணவர்களே, இன்னும் 2 நாள் தான் இருக்கு..!! உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

மாணவர்களே, இன்னும் 2 நாள் தான் இருக்கு..!! உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!!

சென்னை, அக்.16- தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வியை வளப்படுத்த அரசு பல விதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி தான் தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் உதவித்தொகை வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மட்டுமின்றி கல்லூரிகளிலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கெல்லாம் எந்த விதமான நிபந்தனையும் கிடையாது. முதுகலை, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க நிபந்தனையாக உள்ளது. மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 மேல் இருக்க கூடாது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்தான் இந்தாண்டு உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு புதிய மாணவர்கள் விண்ணப் பிக்கலாம்.

https://ssp. tn.gov.in என்ற இணையதள முகவரியில் புதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இதில் பெயர் உள்ள மாணவர்கள் கூட இதில் லாகின் செய்து அதை புதுப்பிக்க வேண்டும். Student login  சென்று அங்கே விவரங்களை அளிக்க வேண்டும். பின்னர், ஆதார் எண் அளித்து e-KYC Verification  கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அங்கே கேட்கப் பட்டுள்ள ஆவணங்களை கொடுக்க வேண்டும். இதற்கான ஸ்டேட்டஸ் உங்களுடைய போனுக்கு வரும்.

இல்லையென்றால் இந்த தலத்தில் சென்று உங்கள் விண்ணப்பம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகி உங்களுக்கு தேவையான குறைகளை இதில் நிவர்த்தி செய்யலாம். விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டால், அதை பற்றி கேட்கலாம். இந்த பணிகளை செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே நேரம் உள்ளது. 

இந்த மாதம் 18ஆம் தேதியோடு இதற்கான நேரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment