திருவிழா திருட்டு - துர்கா பூஜையில் திருட்டு அமோகம்: 26 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

திருவிழா திருட்டு - துர்கா பூஜையில் திருட்டு அமோகம்: 26 பேர் கைது

புவனேஸ்வர், அக். 25- நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் பல்வேறு பகுதிகளில் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு துர்கா பூஜை கூட்டநெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வந்தது.

கூட்டநெரிசலின் போது தங்க நகைகள், அலைபேசிகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்ததாக 5 பெண்கள் உள்பட 26 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் புவனேஸ்வர் சஹீத் நகர், கந்தகிரி, மஞ்சேஸ்வர், நயபள்ளி மற்றும் லட்சுமிசாகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இவர்களை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 அலைபேசிகள் மற்றும் ரூ.7,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.





 

No comments:

Post a Comment